உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டதாக கூறினார்.
கோவை: 'பிட் இந்தியா' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் குஜராத் முதல் கோவை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தொண்டாமுத்தூர், கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சிவ சூர்யா (27). குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் 'பிட் இந்தியா' திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பசுமை இந்தியாவை உருவாக்க சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 1902 கி.மீ., தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
கடந்த ஜனவரி 1ம் தேதி குஜராத்தில் இருந்து புறப்பட்ட சூரியா, பல்வேறு மாநிலங்களைக் கடந்து 10 நாட்கள் தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு கோவை வந்தடைந்தார்.
மேலும் இதுகுறித்து சூர்யா கூறுகையில்,
"கடந்த நான்கு வருடங்களுக்கு முன், எனது தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்.
உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.
'பிட் இந்தியா' திட்டத்தை, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பயணத்தை மேற்கொண்டேன். பசுமையான இந்தியாவை உருவாக்க, சைக்கிள் பயன்படுத்துவதற்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்றார்.