தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 88 சதவீதம் பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் 100க்கும் கீழ் இருந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது, நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கொடிசியா போன்ற இடங்களில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நோயின் பாதிப்பு தன்மை சற்று குறைவு என்பதால், கொரோனா பாதிக்கப்படுபவர்களில், 88 சதவீதம் பேருக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
கொரோனா பாதிக்கப்படுபவர்களில், 88 சதவீதம் பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்' என்றனர்.