கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 12,76,426 பயணிகள் பயணம்..!

இதில், உள்நாட்டுத் துறையில் 12,24,492 பயணிகளும், சர்வதேசத் துறையில் 51,934 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 12,76,426 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் அதனை சுற்றியுள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் விமானப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. தொற்றுநோய் பரவலுக்கு முன்பு, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விமான நிலையத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்வர்.

இந்நிலையில், 'கோவிட்-19' தொற்றுநோய் பரவல் காரணமாக விமான சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை 12,76,426 பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதில், உள்நாட்டுத் துறையில் 12,24,492 பயணிகளும், சர்வதேசத் துறையில் 51,934 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையம் நல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியது. ஆனால் மீண்டும் 'கோவிட்-19' வைரஸ் மூன்றாவது அலை மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் விமான சேவைகள் மற்றும் பயணிகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, கடந்த நவம்பர் 2021ல் 1,47,276 மற்றும் டிசம்பர் 2021ல் 1,70,447 பயணிகள் உள்நாட்டுத் துறையில் விமான நிலையத்தைப் பயன்படுத்தினர். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோவை சர்வதேச விமான நிலையத்தில் அதிக பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...