கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஷாம் எட்வர்ட் (42) என்பவர் சாலையில் நகை கிடப்பதை பார்த்து, அதை எடுத்து வந்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவருக்கு துணை ஆணையர் வின்சன்ட் பாராட்டுக்களை தெரிவித்தார்.
கோவை: கோவையில் சாலையில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த வாலிபரை போலீசார் பாராட்டினர்.
கோவை ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருபவர் கவிதா தேவி. இவர் கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று குடும்பத்தோடு கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று பீளமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஷாம் எட்வர்ட் (42) என்பவர் சாலையில் நகை கிடப்பதை பார்த்து, அதை எடுத்து வந்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணை செய்த போது, அது பெண் காவலர் கவிதா தேவியின் நகை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உதவி ஆணையர் வின்சன்ட், நகையை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சுரேஷ் சாம் எட்வர்டை அழைத்து பாராட்டினார்.
மேலும், நகையை கண்டெடுத்த சுரேஷ் சாம் எட்வர்யிடம், நகையை பெண் காவலர் கவிதா தேவியிடம் கொடுக்க செய்தார். தொடர்ந்து, அனைத்து காவலர்களும் சுரேஷின் நாணயத்தை பாராட்டினர்.