கோவை பெரியார் சிலை அவமதிப்பு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...! காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவு

அருண் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் செய்த குற்றச் செயல்களால் ஏற்பட்ட பொது ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கோவை: கோவை வெள்ளலூர் அருகே கடந்த 8 ஆம் தேதி தந்தை பெரியார் சிலை மீது 2 மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து, காவி பொடியை தூவி சென்றனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, பெரியார் சிலையை அவமதிப்பு செய்தது வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் என்று தெரியவந்தது. கடந்த 11 ஆம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்த இரு நபர்கள் செய்த குற்றச் செயல்களால் ஏற்பட்ட பொது ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறையில் உள்ள மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் இருவருக்கும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறித்தான உத்தரவு நகல் கொடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...