கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 3,100 கொரோனா படுக்கைகள் தயார் - அதிகாரி தகவல்..!

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள மீண்டும் படுக்கை வசதிகள் தற்போதும் தயார் நிலையில் உள்ளன. இந்த படுக்கை வசதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது அலை தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 2,042 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 10,147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்தபோது செப்டம்பர் மாதத்தில் கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருந்தது.

பின்பு தொற்று குறைந்தால் அந்த படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மண்டபம், இடங்கள் மூடப்பட்டன. தற்போது கோவையில் மீண்டும் 3-வது அலை அச்சுறுத்த தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் சிகிச்சை அளிக்கும் இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது கொரோனா 3வது அலையில் கிராமப்புறங்களில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் பதிவாகி வருகின்றது. கிராமப்புறங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றை கண்டறியும் பணியில் மட்டும் சுமார் 2,500 பேர் ஈடுபட்டுள்ளனர். பாஸ்டிவ் ஆகும் நபர்களுக்கு அங்கேயே சிகிச்சை மேற்கொண்டு பரிசோதனைகள் செய்து, பாதிப்புகள் அதிகமாக உள்ளவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கும், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கும் அனுப்பி விடுகின்றனர்.

இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே ஊரக பகுதிகளான சூலூர், துடியலூர், மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, காரமடை, எஸ்.எஸ்.குளம், ஆனைமலை, சுல்தான் பேட்டை, அன்னூர், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் சுமார் 3,100 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தற்போது 3வது அலையை எதிர்கொள்ள மீண்டும் இந்த படுக்கை வசதிகள் தற்போதும் தயார் நிலையில் உள்ளன. இந்த படுக்கை வசதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...