சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஏராளமானோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்பு படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மார்க்கெட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த சண்முகம் (45), நேற்று வழக்கம் போல வேலை முடிந்ததும் இவர் அந்த பகுதியில் உள்ள கடை முன்பு இரவு படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது, அந்த வழியாக சென்ற மர்ம நபர், சண்முகத்தின் தலையை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு, தப்பி சென்றுள்ளார்.

இதனிடையே, இன்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள், ஒரு நபர் இறந்து கிடப்பதை பார்த்து சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசார், சண்முகம் முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.