கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக, பீளமேடு காவல் நிலையத்தில், பாதிக்கபட்ட தூய்மை பணியாளர் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக, பீளமேடு காவல் நிலையத்தில், பாதிக்கபட்ட தூய்மை பணியாளர் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர சுகாதார பணியாளர் சிவகுமார் என்பவரை அவருடன் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர், செல்வம் என்பவர் கன்னத்தில் அறைந்ததாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சிவகுமார் அளித்துள்ள புகார் மனுவில், தனக்கு இரண்டு நாட்களாக உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் சூப்பர்வைசரிடம் முன்னதாகவே சொல்லி விட்டு விடுப்பு எடுத்ததாகவும், ஆனால், செல்வம் என்ற ஒப்பந்த துப்புரவு பணியாளர் தன்னை வேண்டுமென்றே கன்னத்தில் அடித்தது மட்டுமின்றி, தகாத வார்தைகளால் திட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து சக பணியாளர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் மனுவில் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.