பட்டாசுகளை கொளுத்திப் போட்டு பார்த்தும் புலி அசைவதாக இல்லை. அதனால் தொடர்ந்து இன்றும் சிறுத்தையைப் பிடிப்பதற்கு தீவிர பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கோவை: கோவை குனியமுத்தூரில் பழைய குடோனில் பதுங்கிய சிறுத்தையைப் பிடிக்க விடிய விடிய போராடிய வனத்துறை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கோவை மதுக்கரை, குனியமுத்தூர், சுகுணாபுரம், பி. கே. புதூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தை 10-ம் மேற்பட்ட நாய்களை கொன்றுள்ளது.
சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் வனத்துறையினர் 3 கூண்டுகள் அமைத்துள்ளனர். எனினும் அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று சிறுத்தை குடோனில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. சிறுத்தை கொஞ்சம் கூட அசராமல் ஆட்டம் காட்டி பழைய குடோனுக்குள் தங்கியுள்ளது. தொடர்ந்து குடோனில் உள்ள அனைத்து வாசல்களையும் வலை அமைத்து வனத்துறையினர் விடிய விடிய காத்திருந்தனர்.
ஆனால், சிறுத்தை வெளியே வருவதாக இல்லை. பட்டாசுகளை கொளுத்தி போட்டு பார்த்தனர். இருந்தும் புலி அசைவதாக இல்லை. அதனால் தொடர்ந்து இன்றும் சிறுத்தையை பிடிப்பதற்கு தீவிர பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதற்காக கூண்டுகள் தயார் செய்யப்பட்டு வாசல்களில் வெளியே வைக்கப்பட்டுள்ளது எனவும் சிறுத்தை பிடிபடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.