குனியமுத்தூர் அருகே குடோனுக்குள் புகுந்த சிறுத்தை

குனியமுத்தூர் அருகே குடோனுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: குனியமுத்தூர் அருகே குடோனுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை கோவைப்புதூர் மதுக்கரை குனியமுத்தூர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. இந்த சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை அந்த பகுதிகளில் உள்ள கல்லூரிக்குள் புகுந்து நாயை அடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்துக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்தும் சிறுத்தை இதுவரை பிடிபடவில்லை.

பி.கே. புதூர் பகுதியில் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒருவர் இன்று காலை திறப்பதற்காக வந்தார். உடனே திறந்தபோது உள்ளே இருந்த உறுமல் சத்தம் வந்த திசை பார்த்து பயந்துபோன அவர் ஏதோ விலங்கு இருக்கிறது என்பதை அறிந்தார்.

ஒருவேளை இந்த பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை தான் உள்ளே இழுக்கலாம் என்று நினைத்த அந்த நபர் உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.



தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.



அப்போது குடோனுக்குள் சிறுத்தை இருப்பது உறுதியானது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து குடோனில் இருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...