டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் பொங்கல் விழாவின் போது பாகனை அடித்துக் கொன்ற யானை..!

நேற்று யானை பொங்கல் விழாவை முடித்து விட்டு, யானை அசோக்கை, பாகன் ஆறுமுகம் மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்ற போது, அவரை திடீரென யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் முகாமில் நேற்று நடந்த யானை பொங்கல் விழாவில், பாகனை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைகள் முகாமில் வனத்துறை சார்பில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.



முகாமில், நேற்று யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அசோக் என்ற 12 வயது யானை பங்கேற்றது. இந்த யானையின் பாகனாக கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) மற்றும் முருகன் யானையுடன் இருந்தனர்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு, யானை அசோக்கை, பாகன் ஆறுமுகம் மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது, திடீரென அந்த யானை ஆறுமுகத்தை தாக்கியது. இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்தவர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த, ஆனைமலை காவல் துறையினர், பாகன் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுபற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகத்தை தாக்கிய 12 வயதான அந்த யானை ஏற்கனவே வண்டலூர் பூங்காவில் இருக்கும் போது, 8 வயதில் ஒருவரை தாக்கியதாகவும், அதனால் டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் நாளன்று ஏற்பட்ட இச்சம்பவம் டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...