போலீசார் விசாரணை செய்ததில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி நேற்று நள்ளிரவில் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, கோவில்பாளையம் பேருந்து நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
பின்னர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.