முழு ஊரடங்கால் கோவையில் சாலைகள் வெறிச்சோடின

இரண்டாவது ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல்படுத்தப் பட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மாநகர் பகுதிகளில் 700 காவல்துறை பாதுகாப்புப் பணியில் 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.



கோவை: இரண்டாவது ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல்படுத்தப் பட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மாநகர் பகுதிகளில் 700 காவல்துறை பாதுகாப்புப் பணியில் 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.



தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு நகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல் முக்கிய கடைவீதிகளான உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி, டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெளியே வருபவர்களை அடிக்க மாட்டோம் என்றும் நியாயமான காரணங்களுக்காக வருபவர்களுக்கு உதவி செய்வோம் என்றும் மாநகர காவல் ஆணையர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...