கிணத்துக்கடவில் வருமான வரித்துறை சோதனை செய்வது போல் வந்து 20-லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

காந்திநகரில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்வது போல் வந்து 20-லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்ற சொகுசு காரில் வந்த 5-பேர் கொண்ட கும்பலை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு காந்திநகரில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்வது போல் வந்து 20-லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்ற சொகுசு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் வசிப்பவர் பஞ்சலிங்கம், கல்குவாரி உரிமையாளரான இவரது வீட்டில் இன்று மதியம் சொகுசு காரில் வந்த ஐந்து பேர் வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வருவதாகவும், தங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று அடையாள அட்டை ஒன்றைக் காண்பித்து சோதனை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.



அப்போது படுக்கை அறைக்கு சென்ற அவர்கள் பீரோவில் சோதனை செய்வதாகக் கூறி பீரோவைத் திறந்து அதில் பஞ்சலிங்கம் வைத்திருந்த 20-லட்சம் ரூபாயை அந்த நபர்கள் கொள்ளையடித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பஞ்சலிங்கம் கிணத்துக்கடவு காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பஞ்சலிங்கம் மற்றும் அங்கிருந்த மகளிடம் விசாரணை நடத்திய பின்னர் காரில் 20-லட்சம் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பிடிக்கும் வகையில் கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத் துறை அதிகாரிகள் போல் வந்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் வீட்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த ஹார்டுடிஸ்க் மற்றும் காசோலைகளை எடுத்துச் சென்றுவிட்டதாகப் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...