ஒரு மணி நேரத்துக்கு நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 40 மற்றும் ரூ. 10 வசூலிக்கப்படும். மேலும், நகரின் ஒரு சில இடங்களில், சாலைகளின் வெளியே வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கோவையில் 30 முக்கிய சாலைகளில் மாநகராட்சி சார்பாக வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும், நகரின் ஒரு சில இடங்களில், சாலைகளின் வெளியே வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, மாநகராட்சி கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், முக்கிய தீர்மானமாக, மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நவாப் ஹக்கீம் சாலை, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுண்டர் வீதி, இடையர் வீதி, வி.எச்.சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி, பேரூர் மெயின் ரோடு, மேட்டுப்பாளையம் சாலை, கவுலி பிரவுன் சாலை, டி.பி. ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை மாநகராட்சி வசூலிக்கும், என கூறப்படுகிறது.
அதே போல், பாரதி பூங்கா சாலை, அழகேசன் சாலை, என்.எஸ்.ஆர். சாலை, டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை, பவர் ஹவுஸ் சாலை,மேற்கு மற்றும் கிழக்கு, கிராஸ் கட் சாலை, சத்தி சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை, சத்தியமூர்த்தி சாலை, பழைய தபால் அலுவலக சாலை, பாரத ஸ்டேட் வங்கி சாலை, அவிநாசி சாலை, கலை கல்லூரி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலைகளுக்கு இது பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 30 அல்லது 40 எனவும், இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 10, என பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டம், சாலைகளின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பார்கிங் செய்ய பயன்படுத்தப்படும் மொத்தம் 28.63 கி.மீ மட்டுமே இத்திட்டத்திற்குள் அடங்கும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டணம் வசூலிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், தெருவுக்கு வெளியே வாகனம் நிறுத்த, நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 என்று மாநகராட்சி தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தெருவுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான மாதாந்திர டிக்கெட்டுகள் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2,400 மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 600 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார் நிறுத்துமிடத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து நிர்வாகிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.