கோவையில் கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் கிராம பகுதியில் உள்ள தோட்டத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இருந்த இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் மற்றும் வனத்துறையினர் மீட்டனர்.


கோவை: கோவையில் விவசாய நிலங்களில் அச்சுறுத்தி வந்த கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடி விரியன்பாம்புகளைவனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் கிராம பகுதி ஒட்டியுள்ள கணேஷ் என்பவரின் விவசாய தோட்டத்தில் இரண்டு கண்ணாடி விரியன்பாம்புகள் மாட்டுத் தொழுவில்பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.



விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் இனப்பெருக்கத்தில் இருந்த இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரை பணையம் வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். சில நாட்களாக, அப்பகுதியில் ஆட்டுக்குட்டி மற்றும் மாடுகளை கொன்று வந்த இந்த இரு பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

சுமார், 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொடிய விஷம் கொண்ட இரு பாம்புகளையும் பாத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரருக்கும், வனத்துறையினருக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...