திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும், இயற்கையை வணங்கும் விதமாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய திருநாளாகவும் பொங்கல் விளங்குகிறது.
தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஒருமாதம் முன்பிருந்தே மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கலுக்குச் செங்கரும்பு, பானைகளில் மஞ்சள் கொத்து கட்டி வழிபடுவது வழக்கம்.
இதனால், செங்கரும்பு, பானை, மஞ்சள் கொத்து விற்பனை ஆண்டுதோறும் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே களைக்கட்டத் துவங்கும். பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், செங்கரும்பு, பொங்கல் பானைகள், மஞ்சள் கொத்து மற்றும் பூளைப்பூ விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் திருப்பூரில், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியுள்ளது. குறிப்பாகச் செங்கரும்பு ஜோடி, 50 முதல், 100 ரூபாய்க்கும், மஞ்சள் கொத்து, 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் காப்புக் கட்டுவதற்குத் தேவையான பூளைப் பூ, ஆவாரம் பூ மற்றும் வேப்பிலை அடங்கியவை ஒருகொத்து, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து பொது மக்களுக்கும் திருப்பூர் மாநகராட்சி சார்பில் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் முகக் கவசம் அணியாமல் வருபவர்களை மார்க்கெட்டுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியும் வருகின்றனர். பொங்கலுக்கு இன்று ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், பொருட்கள் வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.