கோவை அருகே ஓட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டு கைது

கோவை துடியலூர் அருகே உள்ள ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார் வயது 38, இவர் நேற்று தனது நண்பர் தீபக் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காகச் சென்றார். அப்போது அங்கு வந்த சப்ளையரிடம் சரவணகுமார் சைவ உணவு வேண்டும் எனக் கேட்டார்.

ஆனால் சப்ளையர் அசைவ உணவு கொண்டு வந்து கொடுத்தார். இதுகுறித்து சரவணக்குமார் கேள்வி கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் கிஷோர் குமார் 40, அவரை அவரை தாக்கினர்.

இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சரவணக்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, அவரை தாக்கிய கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் கிஷோர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

அப்போது அவர் மசாஜ் சென்டரில் லஞ்சம் பெற்றதாகக் கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கிஷோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...