கோவையில் திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை

கோவை ஆலாந்துறை அடுத்த சித்திரைசாவடி தோட்டத்தில் உள்ள வீட்டில் திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 11-பேரை ஆலாந்துறை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த சித்திரைசாவடி தோட்டத்தில் உள்ள வீட்டில் திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 11-பேரை ஆலாந்துறை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஆலந்துறை அருகே உள்ள சித்திரைச் சாவடி அணையில் அடையாளம் ஆண் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சடலமாக மிதந்தவரைத் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று முன் தினம் இரவு ஆலாந்துறை சித்திரைச் சாவடி பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மணி என்பவரது வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் அங்கு திருட முயன்றதாகவும், அப்போது மணியின் மகன் விஸ்வநாதன், மருமகன் சம்பத்குமார் ஆகியோர் அந்த இளைஞரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கி கட்டி வைத்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் ஆலாந்துறை போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீஸார் பிடிபட்ட நபர் குடிபோதையிலிருந்ததால் காலையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் படி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது.

ஆனால் காயங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வட மாநில இளைஞர் மறுநாள் காலையில் மாயமானதாக வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தான் சித்திரைச் சாவடியில் அணையில் சடலமாக மீட்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

மேலும் விஸ்வநாதன், சம்பத்குமார் உள்ளிட்ட 4-பேர் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்ததும், இதையடுத்து, அவரின் உடலை சித்திரைச் சாவரி அணையில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், பிடிபட்ட 4-பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சித்திரைசாவடியை சேர்ந்த K விஸ்வநாதன் (30), A காளியப்பன் (56), K சம்பத்குமார் (41), K துரைசாமி (50), S கார்த்தி (31), P கணேசன் (37), B ஜெகநாதன் (45), A பொன்னுசாமி (52) மற்றும் புலுவபட்டியைச் சேர்ந்த R ஜோதிராஜ் (50), S சரவணகுமார் (44) உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...