திருப்பூரில் பாசி நிறுவனம் ரூ. 870 கோடி மோசடி செய்த வழக்கு: விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கொரோனா பரவல் காரணமாக, நேரடி விசாரணைக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வாயிலாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.


திருப்பூர்: திருப்பூரில் பாசி நிறுவனம் ரூ. 870 கோடி மோசடி செய்த வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு கோவை டான்பிட் நீதிமன்ற நீதிபதி ரவி ஒத்திவைத்தார்.

திருப்பூரில் செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' (Paazee Forex Trading Firm) என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. சாட்சி விசாரணை கடந்த நவம்பரில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதத்திற்கு வாய்தா போடப்பட்டு இருந்தது.

கொரோனா பரவல் காரணமாக, நேரடி விசாரணைக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், ஆன்லைன் வாயிலாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வக்கீல் ஆகியோர், காணொலி வாயிலாக ஆஜரானார்கள். அப்போது, எதிர் தரப்பு வக்கீல், தனது வாதத்தை முன்வைக்க அவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 20க்கு நீதிபதி ரவி ஒத்திவைத்தார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...