மருதமலை கோவில் பகுதியில் 200-கிலோ நெகிழி குப்பைகள் அகற்றம்

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்று எல்லைக்குட்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை சாலையோர பகுதியில் 200-கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.


கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்று எல்லைக்குட்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை சாலையோர பகுதியில் 200-கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.



கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்று எல்லைக்குட்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் வரை சாலையோரம் உள்ள நெகிழிக் குப்பைகள் மற்றும் மக்கும் குப்பைகளை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் அகற்றப்பட்டது.



மாவட்ட வன அலுவலர் தலைமையில், கோட்ட உதவி பாதுகாவலர், வனச்சரக அலுவலர் சரக பணியாளர்கள் 25-பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 10-பேர் கொண்ட குழுவினர் சுமார் 2-கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள 200-கிலோ எடை கொண்ட நெகிழி குப்பைகளை அகற்றி உள்ளனர்.

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கோவில் அருகே உள்ள கடைகளுக்கும் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வரும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்து கோவில் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் கடைகளில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில், கிடந்த யானை சாணத்தில் பால் பாக்கெட் போன்ற நெகிழி கழிவுகள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...