கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 5-மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5-மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5-மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5-மாவட்ட வருவாய்‌

அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவல‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகள்‌ தொடர்பாக மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்கும்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டுள்ள மாவட்ட வருவாய்‌ அலுவலார்களுடான கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ காணொளி காட்சி (Video Conference) வாயிலாக இன்று 11.01.2022 நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்ததாவது:-

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்கும்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்திற்கு ஒருவர்‌ வீதம்‌ 5 மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறார்கள்‌.

வடக்கு மண்டலத்திற்குத் மீனாட்சி சுந்தரம்‌, தெற்கு மண்டலத்திற்கு மரு.செல்வசுரபி, கிழக்கு மண்டலத்திற்கு மரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்‌, மேற்கு மண்டலத்திற்கு மரு.மோ.ஷாமிளா, மத்திய மண்டலத்திற்கு கோவிந்தராஜீல்‌ ஆகியோர்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.

மாநகராட்சியின்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனைகள்‌, ஸ்கேன்‌ மையங்கள்‌, ஆய்வகங்கள்‌ உள்ளிட்ட இடங்களில்‌ கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்‌ நபர்கள்‌ தொடர்பான விபரங்கள்‌, தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களின்‌ விபரங்கள்‌ போன்ற தகவல்களைச் சேகரிக்க வேண்டும்‌. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள்‌ குறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட மண்டலங்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டும்‌.

மேலும்‌, 500 காய்ச்சல்‌ கண்டறியும்‌ முன் களப்பணியாளர்கள்‌, வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும்‌ 5 சிறப்பு மருத்துவக்குழுக்கள்‌ மற்றும்‌ நாள்தோறும்‌ நடைபெறும்‌ சிறப்பு காய்ச்சல்‌ முகாம்கள்‌ உள்ளிட்ட தொடர்‌ நடவடிக்கைகளைக் கண்காணித்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா‌, உதவி நகர்‌ நல அலுவலர்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...