கோவையில் பொங்கல் பண்டிகைக்கு கரும்புகள் தயார்

15-கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கு விற்கப்படுகிறது.


கோவை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கரும்புகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

பொங்கல் என்றாலே நம் மனதில் முதலில் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். அந்த வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கரும்புகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.



கோவை தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம், எம்.ஜி‌.ஆர் மார்க்கெட்டிற்க்கு கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை மதுரை மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவளர்ச்சோலை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கொண்டுவரப்பட்டுக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.



15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு ஜோடி கரும்பு ரூ. 100-க்கு விற்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் எதிர்பார்த்ததுபோல் நடைபெறுமா என்ற கலகத்தின் கரும்பு வியாபாரிகள் உள்ளனர்.

இதுகுறித்து தியாகி குமரன் மார்க்கெட்டில் கரும்புக்கடை போட்டுள்ள பழனி (வயது 45) கூறியதாவது:- நாங்கள் மதுரை மேலூரில் கரும்பு தோட்டம் வைத்துள்ளோம். வருடாவருடம் பொங்கல் பண்டிகைக்குக் கோவை மார்க்கெட்டில் கரும்பு கடை போட்டு வியாபாரம் நடத்துவோம். கொரோனா காரணமாக வியாபாரம் சரிவர நடைபெறுமா என அச்சமாகத் தான் உள்ளது. கடந்த வருடம் இன்றைய தினத்தில் 10 லாரியில் விற்பனைக்குக் கரும்புகள் கொண்டு வந்தோம்.

இந்த வருடம் ஒரு லாரியில் 19 டன் கரும்புக்கு மட்டுமே எடுத்து வந்துள்ளோம். இந்த வருடம் பருவமழை காரணமாகவும், அதிகமாக மழை பெய்ததால் கரும்பு விளைச்சல் குறைவாகத்தான் இருந்தது. பராமரிப்பு செலவும் அதிகமாக இருந்தது. கட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.

பல பொதுமக்கள் விலையைக் கேட்டவுடன் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்த வருடம் கரும்பு தட்டுப்பாடு அதிகம். தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுக்குக் கரும்பு கொள்முதல் செய்தது வரவேற்கத்தக்கது.

இருந்தாலும் தற்போது நிறுவனங்கள், பொதுமக்கள் கரும்புகளை அதிக அளவில் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் கரும்பு கடைகளை அமைத்திருக்கிறோம். இந்த பொங்கலுக்கு வியாபாரம் எந்தளவிற்கு நடைபெறும் என்பது கணிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...