கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்; மொத்தம் 12,059 படுக்கைகள் தயார் - கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று காலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று காலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்:-

"முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மாவட்டங்கள் தோறும் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் ஆய்வுக்கூட்டம், அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. இங்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில், கோவையில் அரசு நிர்வாகத்தின் சார்பில் 7,368 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளில் 4,691 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மொத்தம் 12,059 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில், மொத்தம் 4,397 ஆக்சிசன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 853 படுக்கைகள் உள்ளது. தேவைப்பட்டால், படுக்கை எண்ணிக்கைகள்உடனடியாக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 27,90,400 பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நிலையில் 27,02,946 தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மீதும் உள்ள 87,454 பேருக்கு இல்லங்களில் தேடிச்சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது. 81 விழுக்காடு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 7000 முதல் 9000 வரை கொரோனாபரிசோதனைகள் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் அதை 12,000 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 11 சோதனைச் சாவடிகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கவனிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களுக்குஉள்ளூர் தொலைக்காட்சிமூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதைப்போல, மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் 100 சிறப்பு அலுவலர்கள், 33 பேரூராட்சிகளுக்கும் 33 சிறப்பு அலுவலர்கள், 7 நகராட்சிகளுக்கும் 7 சிறப்பு அலுவலர்கள், 12 ஊராட்சிகளுக்கும் 12 சிறப்பு அலுவலர்கள் என 152 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாட்ஸ் அப் குழு மூலம், தகவலை பகிர்ந்து கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கோவையில் தடுப்பு நடவடிக்கைகளில் 2,206 மருத்துவ பணியாளர்கள் தற்போது உள்ள நிலையில் அவர்களுக்கு 2 மாதம் கூடுதல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், 1,105 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 3,311 மருத்துவ பணியாளர்கள் தற்பொழுது தயாராக உள்ளனர்.

மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் ஊரடங்கு போடப்பட்டுவதால், அதற்கு முந்தைய தினம் அதிகமாக மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் இயன்றவரை தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மதுக்கடைகளை பொருத்தவரை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அரசு வழிகாட்டுதலின்படி நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.

கோவையில் 70,950 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டியவர்கள், 1,671 பேர் தற்போது வரை செலுத்திக் கொண்டு உள்ளனர். ஒமிக்ரான் பரிசோதனை செய்ய அரசின் சார்பில் 2 லேப்தற்போது உள்ளது. தனியார் லேப்கள் 28உள்ளது. வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கும் தடுப்பூசி தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் ஆலோசனைசெய்வதாக கூறி உள்ளனர். அவர்கள் ஆலோசனை செய்து விட்டு கூறினால், மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு எடுக்கும், என தெரிவித்தார்.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் இருந்து வரும் சிசிடிவி நேரலை கட்சிகளை அமைச்சர் பார்வையிட்டார்.



உடன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உட்பட மருத்துவத் துறை காவல் துறை ஆகிய அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...