கோவை வந்த ரயிலில் ரூ.30 லட்சம் பறிமுதல்: சிக்கிய வடமாநில வாலிபர்

கோவை வந்த ரயிலில் ரூ.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநில வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை வந்த ரயிலில் ரூ.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநில வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்பாத்திலிருந்து கோவை வழியாகக் கேரள மாநிலம் ஆலப்புழாவுக்குச் செல்லும் நேற்று இரவு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த ஒரு வாலிபரை விசாரித்ததில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததை அடுத்து, அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அதில் ரூ.30 லட்சம் பணம் இருந்துள்ளது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் அந்த வாலிபரிடம் இல்லை. தொடர்ந்து அந்த வாலிபரை அதே ரயிலில் ஆர்பிஎப் போலீசார் கோவை அழைத்து வந்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லால் சிங் ராவ் என்பதும், சென்னையிலிருந்து ரயிலில் கோவைக்குத் தங்க நகை வாங்க வந்ததாகத் தெரிகிறது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்து, கோவை ரேஸ் கோர்சில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா பணமா? எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...