கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு: எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.


கோவை: பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈவேராவின் திருவுருவச் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.

இதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் தமிழகம் மட்டுமன்றி உலக நாடுகளில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

இவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால், தமிழகத்தில் பெண் உரிமை விடுதலை விதவைகள் மறுமணம் இட ஒதுக்கீடு ஜாதி சமய வேறுபாடற்ற சமுதாயம் அமையவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவைப் பரப்பி மக்களிடையே சுயமரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

இத்தகைய பெருமைக்குரியவரை அவமதித்த சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோதிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...