கோவை சிங்காநல்லூர், பீளமேடு, ஆகிய பகுதிகளில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் முழு ஊரடங்கில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பொது போக்குவரத்து மற்றும் கடைகள் திறக்க அனுமதி இல்லை. மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகள் மற்றும் செயல்பட்டனர். மேலும், ஊரடங்கு நாளில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மருத்துவம் உள்ளிட்ட மிக அவசியத் தேவைகளை மட்டும் செல்லலாம். மீறினால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவை மாநகரைப் பொறுத்தவரை நேற்று 47-சோதனைச் சாவடிகளில் சுமார் 700- போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளியே வருபவர்களிடம் காரணம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சிலர் விதிமுறைகளை மீறி சாலைகளில் உலா வந்தனர். இதையடுத்து, கோவை சிங்காநல்லூர் பீளமேடு ஆகிய பகுதிகளில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.