கோவை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.59.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

இந்த ஆய்வின்போது, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.59.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டிடப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்த பின்னர், பொறியாளர்களிடம் மழைநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் தளத்தில் ரூ.59.60 இலட்சம் மதிப்பீட்டில் 4900 சதுர அடி வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறை கட்டடம் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.



அப்போது, கட்டுமான பணிகளை தரமாகவும் விரைவாகவும் கட்டிமுடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அம்ரூத் திட்டத்தில் இளங்கோ நகர் பூங்கா பராமரிப்பு பணிகளையும், அப்பகுதி பொதுமக்களிடம் குப்பைகளை எவ்வாறு வழங்கி வருகிறார்கள் என்பதை கேட்டறிந்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்கிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

பின்னர், இளங்கோ நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், அவினாசி சாலை முதல் விரியம்பாளையம் வரை கோல்டன் ரோடு பகுதியில் தற்போது பெய்த மழையில் சேதமடைந்த 885 தொலைவிற்கு தார் சாலை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமதிப்பு உடனடியாக தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...