துணிப்பை கொண்டு வந்தால் ரூ.5 தள்ளுபடி..! பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்காற்றும் கோவை நடைபாதை வியாபாரிகள்..!

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகள், காய்கறிகள் வாங்க துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "மீண்டும் மஞ்சப்பை" என்ற திட்டத்தை சில தினங்களுக்கு முன் துவக்கி வைத்தார்.



அதற்கு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கோவையை சேர்ந்த நடைபாதை வியாபாரிகள், காய்கறிகள் வாங்க துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



கோவை ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நடைபாதை காய்கறிகள் மற்றும் பழக்கடை வியாபாரிகள் சிலர், வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிச் செல்ல துணிப்பையுடன் வந்தால், அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.5 தள்ளுப்படியுடன் காய்கறி பழங்களை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து பேசிய ஒரு தள்ளுவண்டி வியாபாரி, "பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வலியுறுத்தும் விதமாகவும், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தள்ளுபடி விலையை அறிவித்துள்ளோம்.

இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், துணிப்பையுடன் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. வாடிக்கையாளர்கள் முதல் முறை பிளாஸ்டிக் பையுடன் வந்தாலும், அறிவிப்பை பார்த்துவிட்டு மறுமுறை வரும் போது துணிப்பை எடுத்து வருவது மாற்றத்துக்கான நல்ல அறிகுறி" எவ்வாறு அந்த வியாபாரி தெரிவித்தார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...