மனசு ரொம்ப வலிக்குது..!! கோவையில் வலிமை திரைப்பட வெளியீடு தள்ளிப் போனதால் போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்..!

ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.


கோவை: கோவையில் வலிமை திரைப்பட வெளியீடு தள்ளிப் போன நிலையில், அஜித் ரசிகர்கள் சார்பில் "மனசு ரொம்ப வலிக்குது" என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அஜித் நடித்த வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் "மனசு ரொம்ப வலிக்குது" என்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். "வலிமை அப்டேட்" என்ற வார்த்தையை சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.



இதனிடையே, கோவை ரயில் நிலையம் அருகே அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற அஜித் ரசிகர்கள் "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...