பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டும், செருப்பு மாலை அணிவித்தும் அவமதிப்பு செய்யப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியினர் கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.