கோவைக்கு ரயிலில் வந்த பயணிகள் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிப்பு..!

வெளியூர்களில் இருந்து வந்து இறங்கியவர்கள், கோவையிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றடைய முடியாமல் தவித்தனர்.


கோவை: ஊரடங்கு நாளான நேற்று, ரயில்களில் கோவை வந்தவர்கள், வீடு போய் சேர முடியாமல் அவதியடைந்தனர்.

கோவை ரயில்வே நிலையத்தை நாளொன்றுக்கு 27 ரயில்கள் கடந்து செல்கின்றன. ஏழு ரயில்கள் இங்கிருந்து மற்ற ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றன. அந்த வகையில், ரயில் போக்குவரத்திற்கு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவைக்கு நேற்று காலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்கினர். ஊரடங்கு காரணமாக உள்ளூர் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், வெளியூர்களில் இருந்து வந்திறங்கியவர்கள், கோவையிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றடைய முடியாமல் தவித்தனர்.

இதில் சிலர், அவர்களது உறவினர்களை ரயில் நிலையத்திற்கு சொந்த வாகனங்களில் வரவழைத்திருந்தனர். அவர்கள் ரயில் டிக்கெட்டுகளை போலீசாரிடம் காண்பித்து புறப்பட்டுச் சென்றனர்.

சில ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் மருத்துவ காரணங்களுக்காகவும், அவசர பணிகளுக்காகவும் இயங்கின. அவற்றில் ரயில் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து, நேற்று பயணித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...