காற்று மாசு, நீர் மாசு ஏற்பட்டு பெரும் அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பசுமை தீர்ப்பாயம் சுயமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து சூளைகளுக்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையில் செங்கல் சூளைக்காரர்களுக்கும் அதற்கு எதிராகப் போராடி வருபவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் விவாதப் பொருளாக மாறி உள்ள நிலையில் சூளை தொடர்பாக வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 5 கிராம ஊராட்சி பகுதிகளிலும் 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன.
அரசின் முறையான அனுமதி இன்றி இயங்கி வந்த இந்த சூளைகள் மலை அடிவாரங்களில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் அளவுக்கு அதிகமாக மண்ணை அள்ளி பெரும் பள்ளங்களை உண்டாக்கி உள்ளன.
காற்று மாசு, நீர் மாசு ஏற்பட்டு பெரும் அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பசுமை தீர்ப்பாயம் சுயமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த நிலையில் சூளைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைத்து விதி மீறல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளைகளால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சூளை தொடர்பான வழக்கு இன்று ஜனவரி 6 பசுமை தீர்ப்பாயத்தில் நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் கொடுத்த அறிக்கை குறித்து இன்று விசாரணை நடக்க உள்ளது.