ஏலூர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் நேற்று கிணத்துக்கடவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் அரசு மதுபானத்தை அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்ததாக ராமநாதபுரம் மாவட்டம் குருந்தங்குடி பகுதியை சேர்ந்த ஷியாம்சுந்தர் (28) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.