மேலும், 'எந்தெந்த ரேஷன் கார்டுதாரர்கள், எந்த நாட்களில் வர வேண்டும்' என தெரிவிக்கும் வகையில், ரேஷன் ஊழியர்கள் டோக்கன் வழங்கி உள்ளனர்.
கோவை: தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் நாளை முதல் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட உள்ளன.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்களுடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதற்காக கொள்முதல் செய்யப்பட்ட மளிகை உள்ளிட்ட பொருட்கள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவும் காலம் என்பதால், கூட்டம் கூடுவதைத் தவிர்க்க 'எந்தெந்த ரேஷன் கார்டுதாரர்கள்,
எந்த நாட்களில் வர வேண்டும்' என தெரிவிக்கும் வகையில், அவர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் ஊழியர்கள் டோக்கன் வழங்கி உள்ளனர்.
இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்ட பரிசு தொகுப்பு திட்ட பொருட்கள் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள ரேஷன் கடைகளில் நாளை முதல், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
கடைசி நேரத்திலாவது, பொங்கல் தொகுப்புடன் குறைந்தபட்சமாக 1,000 ரூபாயாவது வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், நிதி சிக்கல் காரணமாக பரிசு தொகுப்பில் ரொக்கம் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.