திருப்பூரில் தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் பின்னலாடை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் - ஏற்றுமதியாளர்கள் வேதனை..!

புத்தாண்டு தினமான இன்று மீண்டும் நூல் விலை 30 ரூபாய் அதிகரித்து, அனைத்து நூல்களும் கிலோவுக்கு 350 முதல் 370 வரை விலை உயர்ந்துள்ளது.


திருப்பூர்: நூல் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி ஆர்டர்களை இழந்து வந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று நூல் விலை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் கிலோ நூல் விலை 350 ரூபாயாக உள்ளது. தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் பின்னலாடை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 120 முதல் 150 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கடந்த நவம்பர் 26ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்நிலையில், இந்திய பருத்தி கழகம் அனைத்து ரக நூல்களின் விலையில் கடந்த டிசம்பர் 10 ரூபாய் குறைத்தது.

நூற்பாலைகளைப் பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும் 1ம் தேதி நூல் விலையை நிர்ணயிக்கின்றன.

அவ்வகையில் கடந்த 2020 நவம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை தமிழக நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தியது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையை ஒரே சீராக தொடர்கின்றன.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் அனைத்து ரக நூல்களும் ரூ. 50 உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது.

கடந்த ஓராண்டில் ரூ. 100 ஏறியிருந்த நூல் விலை, நவம்பர் மாதத்தில் தடாலடியாக அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 ஏறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.10 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டு தினமான இன்று மீண்டும் நூல் விலை 30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் அனைத்து நூல்களும் கிலோவுக்கு 350 முதல் 370 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில்,

மாதம் தோறும் நூல் விலையானது உயர்ந்து வருவது பின்னலாடை துறையை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும். பஞ்சு விலை உயர்வைக் காரணம் காட்டி நூல் விலையை உயர்த்துவது நியாயமற்ற செயல். மத்திய அரசு இதற்கு உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டும் இல்லாவிட்டால் பின்னலாடை துறையே இல்லாமல் போய்விடும்.

பின்னலாடைகளை நாம் ஏற்றுமதி செய்து வந்த காலம் மாறி இந்த நூல் விலை ஏற்றத்தால் நாம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் வெகுவிரைவில் ஏற்படும் எனவே இந்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...