ஆண்டு துவக்கத்தின் போது அம்மனை தரிசித்தால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும், மன நிம்மதி உண்டாகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வணங்கி வருகின்றனர்.
திருப்பூர்: புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
2021ம் ஆண்டு நிறைவடைந்து 2022ம் ஆண்டு துவங்கி உள்ளது. புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், இந்த ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டு மற்றும் சித்திரை 1ம் தேதி என இரு தினங்களில் மட்டும் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு 10 ரூபாய், 20 ரூபாய், 50, 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாலையாக கோர்த்து அதில் அலங்காரம் செய்துள்ளனர். ஆண்டு துவக்கத்தின் போது அம்மனை தரிசித்தால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும், மன நிம்மதி உண்டாகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வணங்கி வருகின்றனர்.