திருப்பூரில் கிணற்றில் குளிக்க சென்ற பத்தாம் வகுப்பு சிறுவன் மாயம்

திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு சிறுவன் மாயமான சம்பவம் தொடர்பாக, தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு சிறுவன் மாயமான சம்பவம் தொடர்பாக, தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் பத்மாவதிபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் பாஷா சுல்தானா தம்பதியினரின் மகன் சல்மான் அகமது. இவர் பள்ளி விடுமுறை என்பதால் இன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

இவருடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் கிணற்றை விட்டு வெளியே வந்த நிலையில், வெகு நேரமாகியும் சல்மான் அகமது வெளியே வராத காரணத்தால் அவர் கிணற்றில் மூழ்கி இருப்பாரோ என்ற சந்தேகத்தில் நண்பர்கள் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.



இதனையடுத்து, பெற்றோர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கிணற்றுக்குள் மாயமான 10-ஆம் வகுப்பு சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...