அமலாக்கத் துறை மதுவிலக்கு போலீசார் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் தனியார் விடுதி மற்றும் மதுபான கடை உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சியில் ஆங்கில புத்தாண்டு அன்று அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு 10 மணி முதல் நாளை 10 மணி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடை ஆணை பிறப்பித்து இருந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள், மதுபானக் கூடங்களில் பொதுமக்கள் அதிகம் அளவில் ஆங்கில புத்தாண்டில் கூடுவதை தவிர்க்க கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அறிவுறுத்தலின்படி, அமலாக்கத் துறை மதுவிலக்கு போலீசார் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் தனியார் விடுதி மற்றும் மதுபான கடை உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அரசாணை மீறி செயல்பட்டால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் உதவி ஆய்வாளர் சுரேந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.