திருப்பூரில் போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

திருப்பூரில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநகர போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநகர போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாநகர போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் சார்பில், கள்ளச்சாராயம் போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மாநகராட்சி சந்திப்பு, புஷ்பா சந்திப்பு பகுதிகளில் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், மது குடித்துவிட்டு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு மதுவிலக்கு போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

மேலும் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் பற்றிய புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்ற இலவச அலைபேசி எண் கொண்ட ஸ்டிக்கரும் வாகனங்களில் ஒட்டப்பட்டது.



தொடர்ந்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இன்னல்கள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...