திருப்பூரில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம்..!

இரு நாட்கள் நடக்கும் சான்றிதழ் சரி பார்ப்பில், மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான உண்மைத்தன்மைகள் ஆராயப்பட உள்ளன.


திருப்பூர்: திருப்பூரில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க உள்ள

மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது.

தமிழகத்தில் நடப்பாண்டு, 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 18 சுயநிதி மருத்துவ கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவமனைகள், 18 சுயநிதி பல் மருத்துவமனைகள் சேர்த்து, மருத்துவத்திற்கு 6 ஆயிரத்து, 957 இடங்களுக்கும், பல் மருத்துவ படிப்பிற்கு 8 ஆயிரத்து, 882 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 7.5 சதவீத ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூரில், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, 114 மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.



இவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இதனைத் தொடர்ந்து இரு நாட்கள் நடக்கும் சான்றிதழ் சரி பார்ப்பில், மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான உண்மைத்தன்மைகள் ஆராயப்பட உள்ளன.



மேலும், சமூக இடைவெளி கருதி திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை மாவட்ட மாணவர்களுக்கு முறையே தனிப்பட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...