கோவை - பாலக்காடு வழித்தடத்தில் தண்டவாளம் அருகே யானை வந்தால் ஒலி எழுப்பும் புதிய கருவி அறிமுகம்..!

காட்டு யானை அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் இந்த ஓசை எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி இரவு 7 மணி முதல் காலை 6.30 மணி வரை செயல்படும்.


கோவை: கோவை - பாலக்காடு வழித்தடத்தில் தண்டவாளம் அருகே யானை வந்தால் ஒலி எழுப்பும் புதிய கருவியை அமைக்க ரயில்வேத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கோவை மற்றும் பாலக்காடு வனப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் சிக்கி யானைகள் உயிரிழந்து வருகின்றன.

இதனை தடுப்பதற்காக காட்டு யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றால் ஓசை எழுப்பக் கூடிய புதிய கருவியை ரயில்வே துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

வனப்பகுதியில் ரயில் பாதையில் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் ஓசை எழுப்பும் கருவியை ரயில்வே துறை அமைத்துள்ளது.

பாலக்காடு - கோவை வழித்தடத்தில் வனப்பகுதியில் உள்ள வாளையாறில்இரவு நேரத்தில் காட்டு யானைகள் ரயில் பாதையில் வருகிறது. இதனால், ரயில் மோதி யானைகள் பலியாகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், வனப்பகுதியில் உள்ள ரயில் பாதை பகுதியில் சூரிய ஒளியால் செயல்படும் சப்தம் எழுப்பும் கருவியை ரயில்வே துறையினர் அமைத்தனர்.



இதிலிருந்து, எழும் சப்தம் கேட்டு காட்டு யானைகள் ரயில் பாதையில் நுழைவதைத் தடுக்க முடியும். காட்டு யானை அடிக்கடி வந்து செல்லும் பகுதியில் இந்த ஓசை எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாடு அறை வாளையாறு ரயில் நிலையத்தில் அமைந்திருக்கும். மேலும், இந்த கருவி இரவு 7 முதல் காலை 6.30 மணி வரை இது செயல்படும்.

இரவு நேரத்தில் இந்த கருவியிலிருந்து தேனீக்கள் சப்தம் மற்றும் புலி உருமல் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதனால், காட்டு யானைகள் தங்கள் வழித்தடத்தை மாற்றிக்கொள்ளும், என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...