மாங்கரை சோதனைச்சாவடியில் யோகா பாய்களை எடுத்து சென்ற டெய்லரை தடுத்து நிறுத்தி ஒரு பாயை எடுத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை.
கோவை: கோவை ஆனைக்கட்டி சாலை மாங்கரை சோதனைச் சாவடியின் வழியாகக் கோவையில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில்,மாங்கரை சோதனைச்சாவடியில் யோகா பாய்களை எடுத்து சென்ற டெய்லரை தடுத்து நிறுத்தி ஒரு பாயை எடுத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ஆனைக்கட்டியில் ஆதிவாசிப் பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள பெண்கள் வாழை நாரிலிருந்து யோகாசனப் பாய் தயாரித்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குத் தயாரிக்கப்பட்ட வாழை நார் யோகாசனப் பாயின் ஓரப் பகுதிகளை தைப்பதற்குச் சின்ன தடாகத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற டெய்லரிடம் கொடுத்திருந்தனர்.
அதன்படி, ஐயப்பன் யோகாசனப் பாயை பைக்கில் எடுத்துச் சென்ற போது சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர்கள் ஐயப்பனைத் தடுத்து நிறுத்தி, யோகாசனப் பாயுக்கு உண்டான ரசீது அல்லது பில்லை கொடுக்கும் படி கேட்டு உள்ளனர். ஆனால், அவர் இதற்கு எல்லாம் பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சோதனைச் சாவடியில் உள்ள காவலர்கள் அவரிடமிருந்த ரூ. 1500 மதிப்பிலான யோகாசன பாயை எடுத்து வைத்துக் கொண்டு ஐயப்பனை அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து ஆதிவாசிப் பெண்கள் வாழ்வாதார மைய நிர்வாகி சௌந்தர்ராஜன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ராஜபாண்டியனிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், சோதனைச் சாவடியில் பணியிலிருந்த துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு முத்துசாமி என்பவர் பாயைப் பறித்து வைத்தது தெரியவந்தது. மேலும், அங்கு பணியிலிருந்த பட்டாலியன் காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்று வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, பாயைப் பறித்த ஏட்டு முத்துசாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் இருவரையும்பட்டாலியனுக்கு மாற்றிக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.