திருப்பூரில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து உதவியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் இன்று கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து உதவியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் இன்று கைது செய்தனர்.
திருப்பூர் குருவாயூரப்பன் நகர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த ஒருவரின் 5-வயது மகள் அந்த பகுதியில் உள்ள அ.தி.மு.க. மாஜி கவுன்சிலர் நடத்தி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி சிறுமியை அவரது தாயார் குளிக்க வைத்தார். அப்போது சிறுமியின் உடலில் ரத்தம் கட்டியது போல, காயம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் உடனே சிறுமியை பாண்டியன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து டாக்டர்கள் சிறுமியைப் பரிசோதித்து விட்டு, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், இது தொடர்பாகப் போலீசில் புகார் தெரிவிக்கும் படியும் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 16-ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பூலுவப்பட்டி சிக்னல் அருகே பொதுமக்கள் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வரை சாலை மறியல் போராட்டத்தில்
தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீஸ் கமிஷனர் வனிதா மற்றும் ஆர்.டி.ஓ-.ஜெகநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாகப் பள்ளியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறுமியிடம் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேருந்து டிரைவர்கள், பேருந்து உதவியாளர்கள் என அனைவரையும் வரவழைக்கப்பட்டு அடையாளம் காண்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.
இதில் சிறுமி ஒருவரை அடையாளம் காண்பித்தார். இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பதும், பேருந்தின் உதவியாளர் என்பதும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் இன்று கைது செய்தனர்.