கோவையில் கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள்..! 100 திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை..!

காவல் உதவி ஆய்வாளர் கவியரசன் இளைஞர்களுக்கு தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்யச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.


கோவை: கோவையில் கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறள் எழுதவைத்து மதுக்கரை போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றதாக தெரிகிறது. அங்கு ஜமாப் மேளத்திற்கு உள்ளூர் இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுக்கரை போலீசார் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



பின்னர் உதவி ஆய்வாளர் கவியரசன் இளைஞர்களுக்கு ஆளுக்கு தலா 100 திருக்குறள்களை எழுதி, படிக்க வைத்து மனப்பாடம் செய்யச் சொல்லி நூதன தண்டனை வழங்கினார்.

இதையடுத்து, இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை எழுதி காட்டியபின் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...