கோவை மாவட்டத்தில் 4 புதிய நகராட்சிகளில் 27 வார்டுகள் உருவாக்கம்..!

மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் 2 ஆயிரம் வாக்காளர்களை அடிப்படையாக கொண்டு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 நகராட்சிகளில் 27 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி மற்றும் கூடலூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக எந்தப் பகுதிகளையும் இணைக்காமல் பேரூராட்சிகளை அப்படியே நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர் பேரூராட்சிகளில் தலா 17 வார்டுகள் இருந்து. தற்போது நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் வாக்காளர்களை அடிப்படையாக கொண்டு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 4 நகராட்சிகளிலும் தலா 9 வார்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...