மேலும், சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை: காரமடை - கோவை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நான்கு வழிச்சாலையாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய, ஒன்றிய பா.ஜ., செயற்குழுக் கூட்டம், காரமடையில் நடந்தது. ஒன்றிய தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசினார்.
அப்போது, காரமடை கார் ஸ்டாண்டில் இருந்து மயானம் வரை, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
தற்போது இருக்கும் குறுகிய சாலையில், காரமடையில் அடிக்கடி மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காரமடை நகராட்சியில் வரும் குடிநீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், மாவட்ட கல்வியாளர் பிரிவு நிர்வாகி கண்ணப்பன், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்ட மீனவர் அணி தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.