கோவையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65-பேர் கைது

மாநகர் முழுவதும் ஒரேநாளில் மது, புகையிலைப் பொருட்கள் விற்றதாக 65 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் கிலோகணக்கில் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் போலீசாரின் சோதனையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் லாட்டரி சீட்டுகள் உட்படச் சட்டவிரோதமாக விற்கப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து வருகின்றன.

கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுப்பட்டனர்.

கோவை மாநகரில் நேற்று பெரியகடைவீதி, ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மாநகர போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நேற்று ஒரே நாளில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் மற்றும் கிலோ கணக்கில் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...