மீண்டும் மஞ்சள் பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் சகோதரிகள் இருவரும் இணைந்து இன்று 15 கிலோ மீட்டர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் மீண்டும் மஞ்சள் பை என்பதை பின்பற்றும் வகையில் மஞ்சள் பையை அனைவரும் பயன்படுத்துவோம் என எட்டு மற்றும் ஆறாம் வகுப்புகளில் பயிலும் சகோதரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி மாரிமுத்து என்பவரின் மகள்கள் பிரேமா மற்றும் உமா. இருவரும் கணபதி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
சமீபத்தில் தமிழக முதல்வர் அறிவித்த மீண்டும் மஞ்சள் பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை பரவலாக அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் சகோதரிகள் இருவரும் இணைந்து இன்று 15 கிலோ மீட்டர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
கணபதி பாளையம் பகுதியில் ஆரம்பித்த இவர்களது நடை பயணத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து தொடங்கி வைத்துள்ளனர்.

15 கிலோ மீட்டர் நடைபயணமாக வந்த இவர்கள் நடைபயணத்தின் போது சந்தித்த மக்களிடம் மஞ்சள் பை மற்றும் துணி பைகளை பயன்படுத்துங்கள், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ள கவர்களை பயன்படுத்துவதை தவிருங்கள் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.