பொள்ளாச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்..! ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள்..!!

கடந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் தடுப்புச் செலுத்திக் கொண்டனர்.

பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், ஆனைமலை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில், தமிழக அரசு சார்பில் அந்தந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு தடுப்பூசி முகாம் மையம், உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் இந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நகரத்தில் 1,265 பொதுமக்களும், தெற்கு ஒன்றிய பகுதிகளில் 2,241 பேரும், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2,380 பேரும், ஆனைமலை ஒன்றியத்தில் 3,243 பேரும், தடுப்பூசி செலுத்தி உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், இதில் அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பெரும் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு, சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...